579244_326389384083268_561693671_nசுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம்
Schweizerisch Tamilischer Fußballverband
Suisse Tamil`s Football Association

16.April.2016

அனைத்து கழகப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு அன்புடன்
சென்ற 10.04.2016 நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அமைய எமது வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்குடன் நாம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம்.எனவே தியாகதீபம் அன்னை éபதி ஞாபகார்த்த சுற்றுப்போட்டி வரை தற்போது நடைமுறையில் உள்ளது போல் திரு முரளி ஊடாக தொடர்புகளைப் பேணுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தியாகதீபம் அன்னை éபதி ஞாபகார்த்த சுற்றுப்போட்டியில் இருந்து வேலைப்பகிர்வும் அதற்கான தொடர்புகளும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேற்படி சந்திப்பில் எட்டப்பட்ட சில முடிவுகளும் விதிமுறைகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகள் யாவும் 17.04.2016 ல் இருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஒரு விளையாட்டு வீரர் அல்லது பொறுப்பாளர் காலமானால் சுற்றுப்போட்டியை தாம் நடத்துவதா அல்லது நிறுத்துவதா என்னும் முடிவு சுற்றுப்போட்டியை நடாத்துபவர்களே எடுப்பார்கள். ஆனால் ஒருகழகம் அப்போட்டியில் பங்குபற்றாவிட்டால் புள்ளிகள் கழிக்கப்படமாட்டாது. இறுதிக்கிரியைகள்(Beerdigungszeremonie,Cérémonied’enterrement)நடைபெற்றபின் நடைபெறும் சுற்றுப்போட்டியில் கழகங்கள் பங்குபற்றாவிடில் புள்ளிகள் கழிக்கப்படும்.
சம்மேளனத்தால் பார்வையாளர் தடை விதிக்கப்பட்ட வீரரோ அல்லது ஆதரவாளரோ தண்டனைக்காலம் முடியும் வரை சுற்றுப்போட்டிகளுக்கு வருகை தராமல் இருப்பதை குறித்த கழகமே உறுதிப்படுத்தவேண்டும். தவிர்க்கமுடியாத காரணத்தால் தங்கள் கழகம் ஒரு சுற்றுப்போட்டியில் கலந்து கௌhள்ளாத பட்சத்தில் தடை விதிக்கப்பட்ட வீரரோ அல்லது ஆதரவாளரோ அச்சுற்றுப்போட்டிக்கு வருகை தந்தால் ஒவ்வொருவருக்கும் தலா 5 புள்ளிகள் கழிக்கப்படுவதோடு தங்கள் கழகம் அடுத்து வரும் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுப்பினையும் பெறும் தவறும் பட்சத்தில் தங்கள் கழகம் அச்சுற்றுப்போட்டியில் ஆடுவதற்கான அனுமதி மறுக்கப்படுவதோடு தங்களுக்கான புள்ளிகளும் கழிக்கப்படும்.
சுற்றுப்போட்டி நடாத்தும் கழகம் சம்மேளனத்தால் பார்வையாளர் தடை விதிக்கப்பட்ட வீரரோ அல்லது ஆதரவாளரோ சமூகம் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கழகத்தினூடாக உடனடியாக அவர்களை வெளியேற்றவேண்டும். மேற்படி சம்பவத்தினை சுற்றுப்போட்டி அறிக்கையில் இணைத்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் சுற்றுப்போட்டியினை நடாத்திய கழகத்திற்கு 3 புள்ளிகள் கழிக்கப்படும்.
பார்வையாளர் தடை விதிக்கப்பட்ட வீரரோ அல்லது ஆதரவாளரோ தங்களாலோ அல்லது தாமகவோ கழகத்தில் இருந்து விலகினாலோ அன்றி விலத்தப்பட்டாலோ எழுத்து மூலம் சம்மேளனத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும். தங்களால் விலக்கப்பட்டால் தண்டனைக்காலம் முடியும்வரை காவல்துறை ஊடாக சுற்றுப்போட்டி தடையினை விதித்து அதன் பிரதியினை சம்மேளனத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.தாங்களாக விலகினால் சம்மேளனம் காவல்துறை ஊடாக சுற்றுப்போட்டித் தடையினை(Turnier-Verbot > interdiction du tournoi)
விதிக்கும்.
பார்வையாளர் தடைவிதிக்கப்பட்ட கழகத்தின் பொறுப்பாளர் தமது கழகத்தால் நடாத்தப்படும் சுற்றுப்போட்டியில் சம்மேளனத்தின் அனுமதி பெற்று பார்வையாளராகவும் கழகத்தின் வேலைத்திட்டங்களிலும் பங்கெடுக்கலாம்
ஆட்டத்தின் போது ஒரு வீரர் இன்னொருவீரரை தாக்க முயற்சிதத் hல் குறைந்தது மூன்று மாதகாலம் சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதி மறுக்கப்படும்.
ஆட்டத்தின் போது மேலதிக வீரர்கள்( Reserve Player, réserve du joueur )மைதானத்திற்குள் புகுந்து தாக்கினால் குறைந்தது ஆறுமாதகாலம் சுற்றுப்போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதி மறுக்கப்படுவதோடு இருனூறு சுவிஸ்பிராங்குகள் ( 200-chf) குற்றப்பணமாகவும் அறவிடப்படும்.
அவசியம் இன்றி வீரரோ ஆதரவாளரோ மைதானத்திற்குள் நுழைந்தால் ஆறுமாதகாலம் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி
மறுக்கப்படுவதோடு இருனூறு சுவிஸ்பிராங்குகள ( 200-chf) குற்றப்பணமாகவும் அறவிடப்படும்
ஆட்டத்தின் போது வீரர்களுக்கிடையில் ஏற்படும் தகராறினை நடுவர் தீர்த்து வைப்பார். மாறாக மூன்றாவது நபர் (விளையாட்டு வீரர் ஆதரவாளர் பயிற்சியாளர்) மைதானத்திற்குள் நுழைந்தால் குறைந்தது மூன்றுமாதகாலம் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதோடு நூறு சுவிஸ்பிராங்குகள் ( 100-chf) குற்றப்பணமாகவும் அறவிடப்படும்
சுற்றுப்போட்டியினை நடாத்தும் கழகம் தமது அறிக்கையுடன் நடுவரின்அறிக்கைää நடுவரின்பெயர் தகுதி முகவரி தொலைபேசி  மின்னஞ்சல் என்பன இணைக்கப்படவேண்டும்.
சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு அணிகளின் பெயர் பட்டியலுடன் வதிவிட(Pass,passer)அனுமதி அட்டையின் பிரதியினையும் பெற்று சம்மேளனத்திற்கு அனுப்பிவைத்தல் அவசியம்.கழகங்கள் நடாத்தும் சுற்றுப்போட்டிகளின் மதிப்பெண்களை(LiveTicker,scoresendirect)நேரஞ்சல் செய்யவேண்டுமாயின் சுற்றுப்போட்டி தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நேர அட்டவணையினை சம்மேளனத்திற்கு அனுப்பி வைத்தல்வேண்டும். தவறும் பட்சத்தில் நேரஞ்சல் செய்யப்படமாட்டாது.

சி.மதியழகன்
நிறைவேற்றுக்குழு சார்பில்
பிரதி : சம்மேளனம் விளையாட்டுத்துறை
நன்றி